31 வயது இளைஞரை கருணைக்கொலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி.. என்ன நடந்தது?
13 ஆண்டுகளாக நினைவு திரும்பாமல் 'கோமா' நிலையில் இருந்த 31 வயது இளைஞரை கருணைக்கொலை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கடந்த 2013-ஆம் ஆண்டு பஞ்சாப் பல்கலைக்கழக மாணவரான ஹரிஷ் ராணா, கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து விழுந்து மூளை நரம்பியல் பாதிப்புக்குள்ளானார். அன்றிலிருந்து இன்று வரை அவர் செயற்கை சுவாசம் மற்றும் உணவு குழாய் மூலமாகவே உயிர் வாழ்ந்து வந்தார்.
அவரது முதிய பெற்றோரின் கோரிக்கையை ஏற்று, ஹரிஷ் ராணாவின் உயிர் காக்கும் கருவிகளை அகற்ற நீதிபதிகள் ஜே.பி.பார்நிவாலா மற்றும் கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு அனுமதி வழங்கியது. குணமடைய வாய்ப்பே இல்லாத நிலையில் ஒரு நோயாளியை தொடர்ந்து துன்புறுத்துவது மருத்துவ கடமை அல்ல என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில்
இந்தியாவில் 2011-ஆம் ஆண்டு அருணா ஷான்பாக் வழக்கிற்கு பிறகு கருணைக்கொலை' சட்டப்பூர்வமானது. இந்த சூழலில், கருணைக்கொலை குறித்து மத்திய அரசு முறையான சட்டம் இயற்ற வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. தன் மகனுக்காக 13 ஆண்டுகள் அயராது போராடிய பெற்றோரின் அன்பையும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டது.
Edited by Siva