மனைவியுடன் வந்து ஓட்டுப் போட்ட ’சூப்பர் ஸ்டார் ’ : திக்குமுக்காடிய போலீஸார் ...வைரல் வீடியோ

shah rukh khan
sinojkiyan| Last Updated: திங்கள், 21 அக்டோபர் 2019 (16:25 IST)
மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில்  இன்று  சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காலையில் முதல் மக்கள் ஆர்வத்துடன் வாக்குச் சாவடிக்கு வந்து ஒட்டுப்போட்டு சென்றனர். 
இன்றுகாலையில், மேற்கு நாக்பூர் தொகுதியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார்.
 
மஹாராஷ்ட்டிர மாநிலத்தில் மொத்தமுள்ள 288 சட்டசபைத் தொகுதிகளில் , பாஜக,- சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.,. காங்கிரஸ் மற்றும் தேசிய வாத காங்கிரஸ் ஆகிய முக்கிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
 
இந்நிலையில் இன்று பாலிவுட் பிரபலங்கள் நடிகர் அபிஷேக் பச்சன், மனைவி ஐஸ்வர்யா ராய் உடன் ஜூஹீ என்ற வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பாலிவுட் பாட்சா மற்றும் சூப்பர் ஸ்டார் என்றழைப்படும் ஷாருக்கான் மும்பை மேற்கு பந்த்ரா வில் தனது மனைவி கவுரியுடன் வந்து வாக்களித்தார்.அப்போது மக்கள் ஷாருக்கானை பார்க்கவும் அவரிடம் செல்ஃபி எடுக்கவும் முயற்சித்தனர். அதனால் ரசிகர்களைக் கட்டுப்படுத்த போலீஸார் சிரமப்பட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
 
ஹரியானாவில் 90 சட்டசபைத் தொகுதிகளுக்கு பாஜக, காங்கிரஸ் மற்றும் ஜனநாயக் ஜனதா ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.இங்கு காலைமுதல் மக்கள் ஆர்வத்துடன்  ஓட்டுச் சாவடிக்கு வந்து வாக்களித்தனர்.
 
 


இதில் மேலும் படிக்கவும் :