செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth K
Last Modified: ஞாயிறு, 29 ஜூன் 2025 (13:24 IST)

திடீர்னு விஐபி லைன் போட்டாங்க.. ஒரே கேட் வழியே போகணும் வரணும்? - பூரி ஜெகன்நாதர் கூட்ட நெரிசல் பலி காரணம்?

Puri Jegannath temple

ஒடிசாவில் பூரி ஜெகன்நாதர் கோவில் ரத யாத்திரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 3 பேர் பலியான நிலையில், கூட்ட நெரிசலுக்கான காரணம் குறித்து சம்பவ இடத்தில் இருந்த பக்தர்கள் சிலர் பேசியுள்ளனர்.

 

ஓடிசாவின் புகழ்பெற்ற பூரி ஜெகன்நாதர் கோவிலில் பிரசித்தி பெற்ற ரத யாத்திரை தொடங்கி நடைபெற்றது. இன்று நள்ளிரவு 2 மணியளவில் ரத யாத்திரை மற்றும் தரிசனத்திற்காக பல்லாயிரக்கணக்கானோர் குவிந்த நிலையில் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 3 பேர் பலியானார்கள். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகிறது.

 

இந்நிலையில் முன் திட்டமில்லாத பாதுகாப்பு ஏற்பாடுகளே கூட்ட நெரிசலுக்கு காரணம் என கூட்ட நெரிசலில் சிக்கி உயிர் தப்பிய பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்றும் தெரிந்தும் வாகனங்கள் நிறுத்த, பக்தர்கள் ஓய்வெடுக்க, குடிநீர், கழிப்பறை வசதிகள் சரியாக செய்யப்படவில்லை என புகார்கள் எழுந்துள்ளது.

 

மேலும் ஏராளமான மக்கள் கூடிய பின்னர் திடீரென ஒரு நுழைவாயிலில் உள்ள மக்களை அவசர அவசரமாக வெளியேற்றி அங்கு விஐபி தரிசன வாயிலாக மாற்றியதால் நிறைய பக்தர்கள் ஒரே நுழைவாயிலுக்கு உள்ளே செல்வதும், வெளியே வருவதுமாக சிக்கியதால் இந்த விபரீதம் ஏற்பட்டதாக சிலர் கூறுகின்றனர்.

 

மேலும் கூட்ட நெரிசலிலும் விஐபிகளின் காரை கோவில் வளாகம் வரைக்கும் கொண்டு வருவதற்காக பக்தர்களை தள்ளிவிட்டு காவலர்கள் வழி ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

Edit by Prasanth.K