வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 8 அக்டோபர் 2014 (17:53 IST)

ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி சுப்பிரமணியசாமி மனு

ஜெயலலிதா தொடர்ந்துள்ள 5 அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணியசாமி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
 
அம்மனுவில், அரசியல் உள்நோக்கத்துடன் தம் மீது ஜெயலலிதா ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது என்றும், தமது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார்.
 
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியசாமி மீது சென்னை அமர்வு நீதிமன்றத்தில் ஐந்து அவதூறு வழக்குகள் தொடரப்பட்டது. இதில் 4 வழக்குகளில் சுப்பிரமணியசாமிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், தன் மீது ஜெயலலிதா தொடர்ந்துள்ள 5 அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணியசாமி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
 
வழக்கில் நீதிமன்றங்களில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள சுப்பிரமணியசாமி, தம்மை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்ற அடிப்படையிலேயே வழக்கு தொடர்ந்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.