குடியுரிமைக்கு எதிரான போராட்டம் டெல்லிக்கு நல்லதுதான்: சுப்பிரமணியம் சுவாமி!

subramaniya swamy
Last Modified திங்கள், 13 ஜனவரி 2020 (21:29 IST)
மத்திய அரசு சமீபத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை தாக்கல் செய்த நிலையில் இந்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தொடர்ந்து போராடி வருகின்றனர்

இந்த சட்டம் கடந்த 10ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்படுவதாக மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்த போதிலும் பல மாநில முதல்வர்கள் இந்த சட்டத்தை தங்கள் மாநிலங்களில் செயல்படுத்த மாட்டோம் என்று கூறி வருகின்றனர். இன்றுகூட பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் அவர்கள் பீகாரில் இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்சிகள் போராட போராட பாஜகவிற்கு நல்லதுதான் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். வரும் பிப்ரவரி மாதம் டெல்லி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் டெல்லியில் உள்ள அரசியல் கட்சிகள் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினால் அந்த போராட்டத்தால் பாஜகவிற்கு லாபம் கிடைக்கும் என்றும் தன்னை நேர்மையாளர் என்று கூறிக் கொண்டிருக்கும் ஒருவர் படுதோல்வி அடைவார் என்றும் சுப்பிரமணியசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


இதில் மேலும் படிக்கவும் :