மாணவியின் மடியில் அமர்ந்து எடுத்த புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்ட மாணவர்கள்

லெனின் அகத்தியநாடன்| Last Modified செவ்வாய், 24 பிப்ரவரி 2015 (19:26 IST)
மாணவியின் மடியில் அமர்ந்து எடுத்த புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்ட மாணவர்கள் 6 பேரை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
கடந்த 22ஆம் தேதி மங்களூர் பல்கலைகழகத்தில் கல்லூரி மாணவர்கள் தங்கள் வகுப்பறையில் ஒரு மாணவியின் மடிமீது அமர்ந்தவாறு மாணவர் ஒருவர் புகைப்படம் ஒன்று எடுத்துள்ளார். அவர் அந்த புகைப்படத்தை கேலியாக பேஸ் புக்கில் பதிவேற்றம் செய்து வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அகில இந்திய வித்யார்த்தி பிரசாத் உறுப்பினர்கள் கல்லூரி முதல்வரிடம் புகார் மனு அளித்துள்ளனர். மேலும், அந்த மாணவன் அடையாளம் தெரியாதவர்களால் தாக்கபட்டு உள்ளார். உடனடியாக அந்த மாணவர் மருத்துவமனையில் சேர்க்கபட்டுள்ளார்.
இது குறித்து கல்லூரி நிர்வாகம் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் அனுப்பி உள்ளது. மேலும், விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதன் முதல் கட்ட நடவடிக்கையாக 5 மாணவர்கள் மற்றும் ஒரு மாணவியையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :