மலக்கழிவு கட்டி தாக்கி மூதாட்டி படுகாயம்: மத்தியப்பிரதேசத்தில் பரபரப்பு


Ashok| Last Updated: வெள்ளி, 8 ஜனவரி 2016 (18:13 IST)
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் விமானத்திலிருந்து கீழே விழுந்த மலக்கழிவு கட்டி எனறு சொல்லப்படும் "புளூ ஐஸ்" தாக்கி போபாலில் மூதாட்டி ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 
இந்த சம்பவம் மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபால் மாவட்டம் அம்கோஹ் கிராமத்தில் நடந்துள்ளது.

விமானத்தில் சேரும் கழிவுகள் எல்லாம் குளிர்விக்கப்பட்டு, உறைந்த திடப்பொருளாக மாற்றப்பட்டு விமானங்கள் கடலின்மீது பறக்கும் போது கடலில் கொட்டப்படும். இத்தகையை திடக்கழிவை ‘புளூ ஐஸ்’ என்று விமான ஊழியர்கள் சொல்லப்படுவார்கள். இந்த மலக்கழிவை கடலில் கொட்டாமல், மத்தியப்பிரதேசம் மாநிலம் போபால் அருகே இருக்கும் அம்கோஹ கிராமத்தில் ஒரு விமானம் கொட்டியுள்ளது. அப்போது கால்பந்து அளவிலான ‘புளூ ஐஸ்’ கட்டி தாக்கி அந்த கிராமத்தில் உள்ள வீட்டில் இருந்த மூதாட்டி தோள்பட்டையில் விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அந்த மூதாட்டி அப்பகுயில் இருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் தற்போது ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
அந்த ‘புளூ ஐஸ்’ கட்டி 40 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து வீட்டின் கூரையை துளைத்துக்கொண்டு உள்ளே விழுந்துள்ளது. ஏனினும், அவரது தலையில் விழுந்து இருந்தால் இந்நேரம் உயிரிழந்திருப்பார் என்ற அருகே இருந்தவர்கள் குறிப்பிட்டனர். விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட  மலக்கழிவான ‘புளூ ஐஸ்’ கட்டி தான் என்று உறுதி செய்யப்பட்டால், சட்டம் 2012ன் படி விமான விபத்து, எதிர்பாராத விதமாக ஏற்படும் விபத்தின் கீழ் மூதாட்டிக்கு இழப்பீடு கிடைக்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :