சோனியா காந்தி நடத்த உள்ள இப்தார் விருந்தை புறக்கணிக்க லாலு முடிவு


K.N.Vadivel| Last Updated: ஞாயிறு, 12 ஜூலை 2015 (00:55 IST)
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நடத்த உள்ள இப்தார் விருந்தை புறக்கணிக்க லாலு பிரசாத் யாதவ் முடிவு செய்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.
 
 
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒவ்வொரு வருடமும் தனது கட்சி நிர்வாகிகளுக்கும், தோழமை கட்சி நிர்வாகிகளுக்கும் இப்தார் விருந்து கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
 
இந்த வருடமும் வரும் 13ஆம் தேதி அன்று இப்தார் விருந்து கொடுக்க அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திட்டமிட்டுள்ளார். டெல்லியில் உள்ள பிரபல ஒரு நட்சத்திர ஹோட்டலில், இந்த இப்தார் விருந்து கொடுக்க உள்ளார்.
 
இந்த விருந்தில், பாஜக தவிர, அனத்து கட்சித் தலைவர்களுக்கும் சோனியா காந்தி அழைப்புவிடுத்துள்ளார். இதற்காக அவர் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் தன் கைப்பட கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.
 
சோனியா காந்தி அழைப்பை ஏற்று, சமாஜ்வாதி தலைவர் முலாயம்சிங் யாதவ், ராஷ்டீ ரிய ஜனதா தளம் தலைவர் லல்லு பிரசாத் யாதவ், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ், தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செய லாளர் சீதாராம்யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் டி.ராஜா உள்பட பலர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில், அனைத்து ஜனதா தள கட்சிகளும் ஒன்றிணைய முடிவு செய்தன. இந்த அணிக்கு காங்கிரஸ் ஆதரவை தெரிவித்தது. மேலும், நிதிஷ்குமார் முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தது.
 
காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடும், நிதிஷ் குமாருக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதும், லாலு பிரசாத் யாதவ் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
 
இதனையடுத்து, சோனியா காந்தி ஏற்பாடு செய்துள்ள இஃப்தார் விருந்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளார். மேலும், அதே நாளில் போட்டி இஃப்தார் விருந்து நடந்த லாலுபிரசாத் யாதவ் ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 


இதில் மேலும் படிக்கவும் :