ஸ்மிருதி மந்தனா திருமணம் திடீர் ஒத்திவைப்பு: சஸ்பென்ஸ் தரும் 'கண் திருஷ்டி' எமோஜி!
இந்தியா உலக கோப்பையை வெல்லக் காரணமாக இருந்த கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் இப்போது வதந்திகளின் மையமாகியுள்ளது. இசை அமைப்பாளர் பலாஷ் முச்சாலுக்கும் ஸ்மிருதிக்கும் நவம்பர் 23 அன்று நடைபெறவிருந்த திருமணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது.
திருமண நாளன்று ஸ்மிருதியின் தந்தை ஸ்ரீனிவாஸ் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அடுத்த நாள், பலாஷும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், ஆரோக்கிய அவசரநிலை காரணமாக திருமணம் ஒத்திவைக்கப்பட்டதாக ஸ்மிருதியின் மேலாளர் அறிவித்தார்.
ஆனால், இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஸ்மிருதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த திருமணம் தொடர்பான அனைத்து பதிவுகளையும் நீக்கியது சமூக வலைதள பயனர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
இருவரும் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினாலும், புதிய திருமண தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையில், ஸ்மிருதி மற்றும் பலாஷ் இருவரும் தங்கள் இன்ஸ்டாகிராம் பயோவில் 'கண் திருஷ்டி' எமோஜியை பதிவிட்டுள்ளது இந்த விவகாரத்தின் சஸ்பென்ஸை மேலும் அதிகரித்துள்ளது.
Edited by Mahendran