வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வியாழன், 23 ஜூலை 2015 (16:38 IST)

பெரிய மோடியின் உதவியால் சிறிய மோடி வலுவாக இருக்கிறார்: மக்களவையில் காங்கிரஸ் அமளி!

மக்களவை கூடியதும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கறுப்பு ரிப்பன்களை அசைத்தபடி அவையின் நடுவே வந்து கூச்சலிட்டனர். அவர்கள் கையில், பெரிய மோடியின் உதவியால் சிறிய மோடி வலுவாக இருக்கிறார் என்ற வாசகம் எழுதப்பட்ட பதாகை இருந்தது. பெரிய மோடி என பிரதமரையும், சிறிய மோடி என லலித் மோடியையும் காங்கிரஸார் சுட்டிக்காட்டினர்.
 

 
மேலும், சுஷ்மா சுவராஜ், வசுந்தரா ராஜேவை பதவியில் இருந்தி நீக்கி உங்கள் 56 இன்ச் மார்பகத்தை காட்டுங்கள் என்ற பிரதமருக்கு எதிரான வாசகம் அடங்கிய பதாகைகளையும் உயர்த்திக்காட்டினர்.
 
இதற்கு சபாநாயகர் எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்து அவையில் அமளி நீடித்தது. இதன் காரணமாக முதலில் மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை மீண்டும் கூடியபோதும் அமளி தொடர்ந்ததால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
 
இன்று காலையும் அவை கூடியது. அவை கூடியவுடன் லலித் மோடி விவகாரத்தில் சுஷ்மா சுவராஜ், வசுந்தரா ராஜே ஆகியோர் பதவி விலகவில்லை என்றால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவையில் விவாதத்துக்கு இடமில்லை என எதிர்க்கட்சிகள் உறுதியாக உள்ளதால் மக்களவை இன்று முற்றிலும் முடங்கியுள்ளது.
 
லலித் மோடி, வியாபம் ஊழல் விவகாரம் எதிரொலியாக மக்களவை நேற்று அலுவல்கள் ஏதும் நடைபெறாமல் நாள் முழுவதும் முடங்கியது குறிப்பிடத்தக்கது.