வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: ஞாயிறு, 18 அக்டோபர் 2015 (13:44 IST)

ஜனாதிபதி மாளிகை அருகே பறந்த மர்ம பொருள் : டெல்லியில் பரபரப்பு

டெல்லியில் ஜனாதிபதி மாளிகை அருகே குட்டி விமானம் போல் ஒன்றை ஒரு வெளிநாட்டுக்காரர் பறக்க விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
டெல்லியில் ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியில் எப்போதும் உச்ச காட்ட பாதுக்காப்பு போடப்பட்டிருக்கும். அந்த பகுதியில் அனுமதியின்றி விமானங்கள் பறக்க தடை விதித்து இருப்பதுடன் ராடார் மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில் நேற்று மாலை ஜனாதிபதி மாளிகை அருகே, ஒரு குட்டி விமானம் போல் ஒன்று வானில் பறந்தது கொண்டிருந்ததை ஒரு பத்திரிகையாளர்கள் பார்த்துள்ளார். பார்ப்பதற்கு,  பொம்மை விமானம் போல் காணப்பட்டது.  அதை வெளிநாட்டுக்காரர் ஒருவர் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கிக் கொண்டு இருந்தார். அது 20 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தது.
 
அந்த பத்திரிக்கையாளர் உடனே காவல்துறைக்கு இதுபற்றி தகவல் தெரிவித்தார். உடனே அந்த வெளிநாட்டுக்காரர் அந்த கருவியை நிறுத்தி விட்டு அதை தனது காரில் போட்டு தப்பிச் சென்றுவிட்டார்.
அங்கு சென்ற போலிசார் விசாரனை செய்தார்கள். அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை பார்த்தனர். அதில் அதில் அந்த வெளிநாட்டுக்காரர் வெள்ளை டி.சர்ட்–சாட்ஸ் அணிந்து இருந்தார்.
 
அவர் தப்பிச் சென்ற காரின் எண்ணை வைத்து போலிசார் விசாரணை செய்தபோது அந்த எண் ரஷிய தூதரகத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்தது என தெரிய வந்தது. பறக்கும் கருவியில் வெளிநாட்டுக்காரர் வீடியோ காமிரா பொருத்தி போட்டோக்கள், வீடியோ எடுத்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
 
இதையடுத்த அந்தப்பகுதியில் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.