1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 16 ஏப்ரல் 2016 (18:14 IST)

ஆதார் கார்டை பயன்படுத்தி புது சிம் வாங்கினால் கட்டணம் குறைப்பு

ஆதார் கார்டு பயன்படுத்தினால், புது சிம் இணைப்பிற்கான கட்டணம் குறைக்கப்படும் என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய (TRAI) தலைவர் சர்மா அறிவித்துள்ளார்.


 

 
ஆதார் அட்டையைப் முகவரிச் சான்றிதழாகப் பயன் படுத்தி புது சிம் காட்டு வாங்கினால் அதற்கான கட்டணம் கணிசமாக குறைக்கப்படும் என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய தலைவர் ஆர்.எஸ்.சர்மா கூறியுள்ளார்.
 
அதன்படி, மின்னணு KYC அடிப்படையில் ஆதார் அட்டையை டிஜிட்டல் அங்கீகாரமாக செயல்பட நடைமுறை படுத்தப்படுத்தப்பட்டால் , அதன் அடிப்படையில் புது சிம் கார்டு இணைப்பிற்கான கட்டணம் பூஜ்யமாக குறைக்கப்படும் என்று சர்மா தெரிவித்துள்ளார்.
 
இந்த முறையை தொலைத் தொடர்புத் துறையிடம் பரிந்துரை செய்துள்ளதாகவும், அதை அவர்கள் வெளிப்படையாக ஏற்றுக் கொண்டதாகவும் சர்மா கூறியுள்ளார். 
 
இதற்கான விதிமுறைகளை அரசு முடிவுசெய்த பிறகு, புதிய சிம்கார்டிற்கான இணைப்பைப் பெற, ஆதார் அட்டை பயோ மெட்ரிக் தகவல் மூலம் அடையாள சரிபார்பு உடனடியாக செயல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.
 
பாக்கிஸ்தானில் அனைத்து சிம் கார்டையும் அங்கீகரிக்க, பயோ மெட்ரிக் பயன்படுத்த முடிவு செய்து கடந்த ஆண்டே அதற்கான திட்டத்தையும் பூர்த்தி செய்துவிட்டது என்று சர்மா குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.