வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : சனி, 30 மே 2015 (13:41 IST)

மத்திய அமைச்சரவை செயலாளராக பிரதீப் குமார் சின்கா நியமனம்

மத்திய அமைச்சரவை செயலாளராக, பிரதீப் குமார் சின்காவை பிரமதர் நரேந்திர மோடி நியமித்துள்ளார்.
 
மத்திய எரிசக்தி துறை செயலரான இருந்த பிரதீப் குமார் சின்கா, மத்திய அமைச்சரவை செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.  தற்போது, மத்திய அமைச்சரவை செயலளராக உள்ள அஜித் சேத்தின் பதவி காலம், அடுத்த மாதம் முடிவடைகிறது.
 
இதனையடுத்து, புதிய அமைச்சரவை செயலராக, தற்போது, எரிசக்தி துறை செயலராக உள்ள பிரதீப் குமார் சின்காவை நியமித்து பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
 
இதற்கு ஏதுவாக, ஜூன் 13ஆம் தேதி, அமைச்சரவை செயலராக பிரதீப் குமார் சின்கா பதவியேற்க உள்ளார்.