1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 5 ஆகஸ்ட் 2015 (17:33 IST)

காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம்: பாஜக மூத்த தலைவர் சத்ருகன் சின்ஹா வருத்தம்

நாடாளுமன்ற மக்களவையிலிருந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் 25 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது வருத்தம் அளிப்பதாக பாஜக மூத்த தலைவர் சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார்.
 

 
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நாடாளுமன்ற நிகழ்வுகள் வருத்தமளிக்கின்றன. எனது எம்.பி. நண்பர்கள் 25 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் அவையில் அப்போது இல்லை. அப்படியிருந்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் நாடாளுமன்ற முடக்கத்துக்கு நல்ல தீர்வு காணப்பட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
 
ஏற்கெனவே, யாகூப் மேமனுக்கு கருணை கோரிய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் வழங்கப்பட்ட மனுவில் சத்ருகன் சின்ஹா கையெழுத்திட்டிருந்தது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
 
தனது நடவடிக்கையால் சத்ருகன் சின்ஹா கட்சியை தர்ம சங்கடத்தில் ஆழ்த்திவிட்டதாக அருண் ஜேட்லி விமர்சித்திருந்தார்.
 
இந்நிலையில், அவர் தற்போது காங்கிரஸ் எம்.பி.க்களை நண்பர்கள் என அழைத்ததோடு, காங்கிரஸ் எம்.பி.க்கள் 25 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது வருத்தமளிப்பதாகவும் கூறியிருக்கிறார்.