வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : திங்கள், 4 ஏப்ரல் 2016 (10:11 IST)

எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மைதான்: உம்மன்சாண்டி மீது சரிதா நாயர் குற்றச்சாட்டு

உம்மன்சாண்டி மீது சரிதா நாயர் குற்றச்சாட்டு

தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மைதான் என்று கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி மீது சரிதா நாயர் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.


 

 
கேரள மாநிலத்தை உலுக்கிய, சூரிய மின்சக்தி ஊழல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சரிதா நாயர், பிஜு ராதாகிருஷ்ணன் என்பவருடன் சேர்ந்து கூட்டாக சூரிய மின்சக்தி உற்பத்திக்காக ஒரு போலி நிறுவனம் நடத்தி, முக்கிய அரசியல் தொடர்புகளை ஏற்படுத்தி, அந்த செல்வாக்கைக் கொண்டு பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
 
இந்த புகாரின் போரில், உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சிவராஜன் தலைமையில் கேரள அரசு ஒருநபர் கமிஷன் அமைத்தது.
 
சரிதா நாயர் அந்த ஒரு நபர் கமிஷன் முன்னர் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அப்போது அவர், முதலமைச்சர் உம்மன்சாண்டிக்கு லஞ்சம் தந்ததாக கூறினார்.
 
இது குறித்து திரிச்சூர் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஒருவர் தாக்கல் செய்த தனிநபர் புகார் மனுவை கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் தேதி நீதிமன்றம் விசாரித்து, உம்மன்சாண்டி மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது.
 
ஆனால் அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் உம்மன்சாண்டி முறையீடு செய்தார். அதைத் தொடர்ந்து ஊழல் தடுப்பு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டது.
 
இந்நிலையில் சரிதா நாயர், அங்குள்ள தொலைக்காட்சி ஒன்றிற்கு சிறப்பு பேட்டி அளித்தார்.
 
அந்த பேட்டியில சரிதா நாயர் கூறியதாவது:-
 
சூரிய மின்சக்தி ஊழல் வழக்கில் நான் பெரும்பாவூர் காவல்துறையினர் காவலில் இருந்தபோது, 2013 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 19 ஆம் தேதி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த அனைத்தும் முற்றிலும் சரியானதே.
 
முதலமைச்சர் தனது இல்லத்தில் வைத்து எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அவரை ஒரு தந்தை ஸ்தானத்தில் நான் பார்த்து வந்த தருணத்தில், அவர் இவ்வாறு நடந்து கொள்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
 
அந்த கடிதத்தில் எழுதி இருந்தவற்றை நான் மறுக்கவில்லை. அந்த கடிதத்தை எழுதியது நான்தான்.
 
உம்மன் சாண்டிக்கு அவரது உதவியாளர்கள் மூலமாக பல்வேறு தருணங்களில் ரூ.2.16 கோடி கொடுத்தேன். இவ்வாறு அவர் கூறினார்.