வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (18:19 IST)

பஞ்சாப் மாநில முதல்வராக சரண்ஜித் சிங் அறிவிப்பு!

பஞ்சாப் மாநிலத்தில் உள்கட்சி அரசியலால் அம்ரீந்தர் சிங் தன்னுடைய முதல்வர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்கள் பிறப்பித்துள்ளார். பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் அவர்களுக்கும், சித்து அவர்களுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனை அடுத்து சித்து அம்ரீந்தர் சிங் எதிர்ப்பையும் மீறி நவ்ஜோத் சிங் சித்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் இப்போது கட்சியில் அம்ரீந்தர் சிங்குக்கு எதிராக எம் எல் ஏக்களை திரட்டி வருகிறாராம் சித்து. இந்நிலையில் கட்சியில் தனக்கு ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் இன்று மாலை கட்சி நிர்வாகிகள் கூடும் கூட்டம் நடந்தது. அதற்கு முன்னதாக ஆளுநரை சந்தித்த அம்ரீந்தர் சிங் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

இந்நிலையில் புதிய முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து இன்று புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் அம்ரீந்தர் சிங்கின் அமைச்சரவையில் தொழில்நுட்ப துறை அமைச்சராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.