நடிகை ஷில்பா ஷெட்டியின் தந்தையிடம் பண மோசடி : சாமியார் கைது


Murugan| Last Updated: சனி, 21 நவம்பர் 2015 (13:44 IST)
மும்பை நடிகை ஷில்ப ஷெட்டியின் தந்தையிடம் யோகா ஆசிரமம் மற்றும் மூலிகை பொருட்கள் நிறுவனம் தொடங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 
 
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் தந்தை சுரேந்திர ஷெட்டியிடம், பாபா ராம்தேவ் பதஞ்சலி யோகா பீடம் மற்றும் மூலிகை பொருட்கள் நிறுவனம் போல், யோகா ஆசிரமமும் மூலிகை பொருட்கள் நிறுவனமும் அமைத்து தருவதாக கூறி, பாபா தேவேந்திரா என்பவர் ரூ.2 கோடி பணம் வாங்கியுள்ளார். இவர் ராம்தேவ் ஹரித்துவார் யோகா பீடத்தில் பணியாற்றி வருகிறார்.
 
ஆனால் கூறியது போல் அமைத்து தரவில்லை.இதனால் சுரேந்திர ஷெட்டி மும்பை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து, மும்பை போலிஸ் பாபா தேவேந்திராவை கைது செய்துள்ளனர். 


இதில் மேலும் படிக்கவும் :