வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 2 மார்ச் 2015 (18:56 IST)

'கான்' நடிகர்களை இளைஞர்கள் வழிபடக் கூடாது: பாஜக எம்.பி.

நடிகர்கள் ஷாருக் கான், அமீர் கான், சல்மான் கான் ஆகிய மூவரும் வன்முறை கலாசாரத்தை பரப்பி வருவதால், அவர்களை வழிபடும் நடவடிக்கைகளில் இளைஞர்கள் ஈடுபட வேண்டாம் என்று பாஜக எம்.பி. சாத்வி ப்ராச்சி தெரிவித்தார்.
 
உத்தராகண்டில் விஷ்வ இந்து பரிஷத்தின் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து பேசிய பாஜக எம்.பி. சாத்வி ப்ராச்சி ஆர்யா அங்கிருந்த சிறுவனிடம் உன் எதிர்கால கனவு என்ன? என்று கேட்டார். அதற்கு பதிலளித்த சிறுவன், தான் சல்மான், அமீர் போல பெரிய நடிகனாக வேண்டும் என்றார். இதற்கான காரணத்தை சிறுவனின் தாயிடம் கேட்ட போது, அந்த நடிகர்கள் சண்டைக் காட்சிகளைப் பார்த்து தனது மகன் இவ்வாறு கூறுவதாக தெரிவித்தார்.
 
இதனைத் தொடர்ந்து சாத்வி பேசும்போது, "ஷாருக் கான், அமீர் கான், சல்மான் கான் ஆகிய மூவரும் தங்களது படங்களின் மூலம் வன்முறை கலாசாரத்தை பரப்புகின்றனர். இந்த மூவரையும் நாம் புறக்கணிக்க வேண்டும். இந்த நடிகர்களின் பட போஸ்டர்களை தீயிட்டு கொளுத்தக் கூட பஜ்ரங்தள் உறுப்பினர்களை கேட்டுக் கொள்ளலாம். இளைஞர்கள் இவர்களை வழிபடக் கூடாது" என்றார்.
 
மேலும் பேசிய சாத்வி, அன்னை தெரஸா மதமாற்றத்தில் ஈடுப்பட்டதாக விமர்சித்தார்.