ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கும் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கும் வித்தியாசம் இல்லை: இர்பான் ஹபீப்


Suresh| Last Updated: திங்கள், 2 நவம்பர் 2015 (18:22 IST)
ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கும் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கும் வித்தியாசம் இல்லை என்று பிரபல வரலாற்று ஆசிரியர் இர்பான் ஹபீப் கூறியுள்ளார்.

 

 
எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள் மீது தொடர்ந்து நடத்தப்பட்டுவரும் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் டெல்லியில் எழுத்தாளர்கள், கலைஞர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் பங்கேற்ற கருத்தரங்கம் நடைபெற்றது.
 
படுகொலை செய்யப்பட்ட எழுத்தாளர் கல்பர்கி, கோவிந்த பன்சாரே, நரேந்திர தபோல்கர் ஆகியோருக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்திய பின்னர் பிரபல வரலாற்று ஆசிரியர் இர்பான் ஹபீப் இந்த கருத்தரங்கில் பேசினார்.
 
அப்வபோது அவர் கூறுகையில், "கடந்த காலங்களில் வகுப்புவாத பதற்றம் மற்றும் வன்முறை நிலவியது உண்மை.
 
ஆனால், தற்போது, மக்கள் அதேநிலை மீண்டும் ஏற்பட்டு விடுமோ..? என அஞ்சுகிறார்கள். ஆர்எஸ்எஸ் இயக்கத்தை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும். 
 
ஆர்எஸ்எஸ் சித்தாந்த நீருற்றின் தலைவர் எம்.எஸ்.கோல்வால்கர்தான் என்பதில் ரகசியம் கிடையாது. அடால்ப் ஹிட்லர் மற்றும் நாஜி கட்சியின் ஆர்வலராக அவர் இருந்தார்.
 
தற்போது, கல்வியாளர்கள் மற்றும் அறிவுஜீவிகள் மீதான தாக்குதலில் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கும் அதிக வித்தியாசம் இல்லை". என்று இர்பான் ஹபீப் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :