வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bharathi
Last Modified: செவ்வாய், 3 நவம்பர் 2015 (16:47 IST)

சிறுவனை தாக்கிய பெண் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்தல்

உத்திரப்பிரதேசத்தில் உதவி கேட்ட சிறுவனின் தலையை காலால் உதைத்த பெண் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்.வலியுறுத்தி உள்ளது.


 
 
மத்தியபிரதேசத்தில் கால்நடை வளர்ப்புத் துறை அமைச்சராக பதவி வகிப்பவர் குசும் மெதெலே.அங்குள்ள பண்ணா மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவை முடித்துக் கொண்ட அவர், தமது காருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
 
அப்போது அவர் முன் மண்டியிட்ட சிறுவன் ஒருவன் பசிக்கு பணம் கேட்டதாக தெரிகிறது. அதனால் கோபமடைந்த குசும் மெதெலே, சிறுவனின் தலையை காலால் உதைத்து விட்டு  பின் அங்கிருந்து சென்று விட்டார்.
 
மனித நேயமில்லாமல் சிறுவனை தனது காலால் பெண் அமைச்சர் தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. அமைச்சரின் செயலுக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.
 
இந்தவரிசையில் தற்போது ஆர்.எஸ்.எஸூம் இணைந்துள்ளது. சிறுவனை தாக்கிய பெண் அமைச்சர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் வலியுறுத்தி உள்ளது. இது குறித்து அமைச்சரும், சத்திஷ்கர் நகர ஆர்.எஸ்.எஸ். தலைவருமான அசோக் செஹானி கூறுகையில், "பொதுவெளியில் அமைச்சர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். மனிதநேயம் இன்றி சிறுவனை தாக்கிய அந்த பெண் அமைச்சரை பதவி நீக்கம் செய்ய மத்தியப் பிரதேச அரசு முன்வர வேண்டும் ".  இவ்வாறு அவர் தெரிவித்தார்.