1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 22 அக்டோபர் 2016 (17:25 IST)

ஏர்டெல், வேடாபோன், ஐடியா நிறுவனங்களுக்கு ரூ.3,050 கோடி அபராதம்

ஜியோ நிறுவனம் சார்பில் ஏர்டெல், வோடாபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் மேல் ஜியோவின் வளர்ச்சியை முறியடிப்பதாக டிராய் அமைப்பில் புகார் அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த மூன்று நிறுவனங்களுக்கும் ரூ.3,050 கோடி அபராதம் விதிக்க டிராய் அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.


 

 
ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ சேவையில் கடந்த செப்டம்பர் மாதம்  அறிமுகப்படுத்தியது. அதைத்தொடர்ந்து குறுகிய காலத்தில் ஜியோவுக்கு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. 
 
மற்ற முன்னணி நிறுவனங்களான ஏர்டெல், ஐடியா, பி.எஸ்.என்.எல்., வேடாபோன் ஆகியவை சரிவை சந்தித்தன. ஜியோ வாடிக்கையாளர்கள் மற்ற தொலைபேசி நிறுவன எண்களுக்கு தொடர்பு கொண்டால், சரியான இணைப்பு வசதி வழங்கப்படுவதில்லை என்று தகவல் பரப்பியதாக ஜியோ சார்பில் டிராய் அமைப்பில் புகார் அளிக்கப்பட்டது.
 
இதையடுத்து ஏர்டெல், வேடாபோன், ஐடியா ஆகிய நிறுவனங்களுக்கு ரூ.3,050 கோடி அபராதம் விதிக்க டிராய் அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.