வெள்ளி, 14 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 4 நவம்பர் 2025 (18:28 IST)

2000 நோட்டுகளில் 'பண மழை' : பெங்களூருவில் நூதன மோசடி செய்த 10 பேர் கைது!

2000 நோட்டுகளில் 'பண மழை' : பெங்களூருவில் நூதன மோசடி செய்த 10 பேர் கைது!
புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்ட ரூ.2000 நோட்டுகளைப் பயன்படுத்தி, "விசேஷ சடங்குகள் மூலம் பண மழை பொழியும்" என்று மக்களை நம்பவைத்த நூதன மோசடி கும்பலை சேர்ந்த 10 பேரை பெங்களூரு காவல்துறை கைது செய்துள்ளது.
 
குறிப்பிட்ட சில சீரியல் எண்கள் கொண்ட (M, N, O, P, G) 2000 ரூபாய் நோட்டுகளை சேகரித்து இந்த கும்பல் மோசடியில் ஈடுபட்டது. நோட்டுகளில் சீரியல் எண்கள் அழிக்கப்பட்டு மாற்றப்பட்டதாக ரிசர்வ் வங்கி அளித்த புகாரின் பேரில் விசாரணை தொடங்கப்பட்டது.
 
வங்கி டெபாசிட் முயற்சியின்போது ஒருவர் முதலில் கைது செய்யப்பட்டார். அதை தொடர்ந்து, மற்ற கூட்டாளிகளும் பிடிபட்டனர். இந்த 10 பேரிடமிருந்தும் சுமார் ரூ.18 லட்சம் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். 
மூடநம்பிக்கையை பயன்படுத்தி, மக்களை ஏமாற்றி இந்த பணத்தை கும்பல் சேகரித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
 
Edited by Mahendran