ரிசர்வ் வங்கி செய்த 1000 ரூபாய் பிழை


K.N.Vadivel| Last Modified வியாழன், 21 ஜனவரி 2016 (22:45 IST)
1000 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி தவறுதலாக அச்சடித்து வெளியிட்டுள்ளது.
 
 
நாட்டில், கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்கும் வகையில், பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது.
 
அவ்வாறு உள்ள ரூபாய் நோட்டுக்களில்  வெள்ளி நிறத்தில் பாதுகாப்பு இழை இருக்கும். ஆனால், சமீபத்தில்  அச்சிடப்பட்ட ரூ.1,000 நோட்டில் இந்த இழை இல்லையாம்.
 
குறிப்பாக, 5 ஏஜி, 3 ஏபி என்ற வரிசை கொண்ட எண்ணில் அச்சிடப்பட்ட 1,000 ரூபாய் நோட்டுக்களில் வெள்ளி இழை இடம் பெறவில்லையாம்.
 
இது போன்று புழக்கத்தில் உள்ள நோட்டை திரும்ப பெற  ரிசர்வ் வங்கி முன்வந்துள்ளது. இந்த வாய்ப்பை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. 
 


இதில் மேலும் படிக்கவும் :