1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 27 அக்டோபர் 2015 (09:28 IST)

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராகுல் காந்தி

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாற்றியுள்ளார்.


 

 
ராகுல் காந்தி பீகார் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
 
அப்போது, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
 
"பிரதமர் நரேந்திர மோடி முந்தய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு குறித்து விமர்சிப்பதை விட்டு விட்டு விலைவாசியை கட்டுப்படுத்துவது குறித்த நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்" என்று ராகுல் காந்தி கூறினார்.