1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Republic Day Ban: Koraput DM Prohibits Non-Veg Sales in Odisha District

நாளை இறைச்சி, கோழி, மீன் கடைகள் திறக்க கூடாதா? கலெக்டர் உத்தரவால் பரபரப்பு..!

Koraput District Magistrate
ஒடிசா மாநிலம் கோராபுட் மாவட்ட ஆட்சியர் மனோஜ் சத்யவான் மகாஜன், குடியரசு தினத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் அசைவ உணவுகளுக்குத் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 
ஜனவரி 26, 2026 அன்று இந்தியாவின் 77-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த முக்கிய முடிவை அவர் எடுத்துள்ளார்.
 
மாவட்ட ஆட்சியர் அனைத்து வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், குடியரசு தினத்தன்று இறைச்சி, கோழி, மீன், முட்டை உள்ளிட்ட எந்தவொரு அசைவ உணவுகளையும் விற்பனை செய்யக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். இந்த தடையை அந்தந்த அதிகார வரம்பிற்குள் முறையாக செயல்படுத்துவதை உறுதி செய்யுமாறு அவர் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.
 
"குடியரசு தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு, துரித நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்" என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
தேசியப் பண்டிகையை முன்னிட்டு அசைவ உணவுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள இந்த விவகாரம், சமூக வலைதளங்களில் விவாதங்களை கிளப்பியுள்ளது.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
ராகுல் காந்தி ஒரு சர்வாதிகாரப் போக்கு கொண்ட தலைவர்: காங்கிரஸில் இருந்து விலகிய பிரபலம்..!