திங்கள், 8 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 6 ஜூன் 2025 (11:05 IST)

ரெப்போ வட்டி விகிதம் 0.5% குறைப்பு.. லோன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம்..!

repo
ரெப்போ வட்டி விகிதத்தை 0.5% குறைத்துள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டதால் வீடு, வாகனம், தனி நபர் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு என்று கருதப்படுகிறது.
 
ரெப்போ வட்டி விகிதம் 6%ல் இருந்து 5.5%ஆக குறைப்பதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு ஏற்கனவே 2 முறை ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்ட நிலையில், தற்போது 3-வது முறையாக 0.5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
 
 2025 பிப்ரவரி மாதம் ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைந்தது. அதன் பின்னர் ஏப்ரல் மாதத்தில் 0.25 சதவீதமும் குறைத்தது. இதன் காரணமாக ரெப்போ வட்டி விகிதம் 6.50 சதவீதத்திலிருந்து 6.00 சதவீதத்துக்கு வந்த நிலையில் தற்போது மீண்டும் 0.5% குறைந்து அது 5.5%ஆக குறைந்துள்ளது.
 
ரெப்போ வட்டி விகிதக் குறைப்புக்கு பொருளாதார நிபுணர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். பணவீக்கம் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும், பணப்புழக்க நிலைமைகள் சிறப்பாக இருக்கும் என்றும் கூறி வருகின்றனர்.
 
Edited by Siva