1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. RBI Phasing Out Small Denomination Notes Rumor Proves Fake Ahead of Diwali

ரூ.10, ரூ.20 மற்றும் ரூ.50 நோட்டுக்கள் இனி புழக்கத்தில் இருக்காதா? ஆர்பிஐ சொல்வது என்ன?

ஆர்பிஐ வதந்தி
ரூ.10, ரூ.20 மற்றும் ரூ.50 மதிப்பிலான பணத்தாள்களின் புழக்கத்தை இந்திய ரிசர்வ் வங்கி  குறைக்க உள்ளதாகவும், இதனால் வரவிருக்கும் தீபாவளி பண்டிகையின்போது சிறிய ரூபாய் தாள்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்படும் என்றும் சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது. 
 
ஆர்பிஐ லோகோ மற்றும் ஆளுநரின் கையொப்பத்துடன் போலியாக உருவாக்கப்பட்ட சுற்றறிக்கை ஒன்று வாட்ஸ்ஆப்பில் பரவியதால், டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறாத மக்களும் வியாபாரிகளும் பெரும் அதிர்ச்சியும் பதற்றமும் அடைந்தனர்.
 
குறிப்பாக, நவம்பர் 8-ஆம் தேதி பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட நாளுடன் இந்த தகவலையும் தொடர்புபடுத்தி பரப்பியதால் மக்களிடையே குழப்பம் தீவிரமடைந்தது. இருப்பினும், இந்த விவகாரம் குறித்து பரிசீலித்த மத்திய அரசின் பிஐபி  உண்மை அறியும் சோதனைக் குழு, சமூக வலைத்தளங்களில் பரவும் இந்த செய்தி முற்றிலும் பொய்யானது என்றும், போலி அறிக்கை என்றும் உறுதிப்படுத்தியுள்ளது. சிறிய ரூபாய் தாள்களின் புழக்கத்தை குறைப்பது தொடர்பாக ரிசர்வ் வங்கி எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
 
எனவே, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இதுபோன்ற வதந்திகளை கண்டு அச்சப்பட தேவையில்லை. சமூக வலைத்தளங்களில் பரவும் எந்தவொரு தகவலையும் உண்மைத்தன்மையை ஆராயாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
நேபாளத்தில் 2 ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து.. சென்னையை சேர்ந்தவர் பலி...