திங்கள், 16 மார்ச் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 7 பிப்ரவரி 2026 (14:22 IST)

டிஜிட்டல் மோசடியில் பணத்தை இழந்தவர்களுக்கு 25 ஆயிரம்!.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு...

digital
தற்போது எல்லோர் கையிலும் இண்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட்போன் இருக்கிறது. அதேபோல பெரும்பாலானோர் கம்ப்யூட்டர் பயன்படுத்துகிறார்கள். ஒருபக்கம் இது வளர்ச்சி என்றாலும் ஒருபக்கம் டிஜிட்டல் மோசடிகளும் அதிகரித்திருக்கிறது.

உங்கள் கிரெடிட் கார்டு நம்பரை சொல்லுங்கள், வங்கியில் இருந்து பேசுகிறோம்.. உங்கள் டெபிட் கார்டு 12 நம்பரை சொல்லுங்கள்.. உங்களுக்கு ஒரு ஓடிபி எண் வந்திருக்கும் அதை சொல்லுங்கள்.. உங்களுக்கு கார் பரிசாக விழுந்திருக்கிறது.. இந்த லின்க்கை கிளிக் செய்யுங்கள் எனக்கூறி வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை திருடி விடுகிறார்கள்.. லட்சக்கணக்கான மக்கள் இப்படி பணத்தை இழந்து வருகிறார்கள்..

ஒருபக்கம் Telegram, Whatsapp போன்ற ஆப்புகள் மூலம் டிஜிட்டல் மோசடி பெரிய அளவில் நடந்து வருகிறது. ஒரே நாளில் இவ்வளவு சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை காட்டி சுலபமாக மோசடி செய்து விடுகிறார்கள்.. எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டு என கருதும் நடுத்தரவர்க்கத்தினரே இதில் அதிகம் சிக்குகிறார்கள்.

இப்படி ஆன்லைனில் பணத்தை இழந்தவர்கள் சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் அளிப்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒருபக்கம்,  அப்படி ஏமாற்றுபவர்களை கண்டுபிடிப்பதும், பணத்தை மீட்பதும் போலீசாருக்கே சவாலாக இருக்கிறது..

இந்நிலையில்தான், டிஜிட்டல் மோசடியில் பணத்தை இழக்கும் மக்களுக்கு உதவ ரிசர்வ் வங்கி முன் வந்திருக்கிறது. எவ்வளவு பணத்தை இழக்கிறார்களோ அதில் 80 சதவீதம், அதிகபட்சமாக 25 ஆயிரம் வரை கொடுக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. விரைவில் இந்த விதிமுறை வரைவு வெளியாகவுள்ளது. அதன் பின் பொதுமக்கள் மற்றும் நிபுணர்களிடம் கருத்து கேட்கப்பட்டு இந்த திட்டம் நடைமுறைக்கு வரவிருக்கிறது. முக்கியமாக இந்த இழப்பீடு ஒரு நபருக்கு வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கொடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது..