வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 17 ஜூன் 2015 (02:22 IST)

தாஜ்மகாலில் இலவச வைபை வசதி தொடக்கம்

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, தாஜ்மகாலில் இலவச வைபை வசதியை, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தொடங்கி வைத்தார்.
 

 
இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற இடமாக விளங்குவது தாஜ்மகால். இதன் அழகை இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில மக்கள் விரும்பி, அடிக்கடி சென்று பார்த்து வருகின்றனர். அது போலவே, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இந்தியா வருகையின் போது, தவறாமல் தாஜ்மகாலை பார்த்துவிட்டு செல்கின்றனர்.
 
இந்நிலையில், தாஜ்மகாலில் வைபை வசதியை மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தொடங்கி வைத்தார். முதல் அரை மணி நேரத்துக்கு, இலவசமாக வைபை மூலம் இன்டர்நெட்டை அனைவரும் பயன்படுத்தலாம். பின்பு, பயன்பாட்டிற்கு ஏற்ப கட்டணம் செலுத்தி இந்த வசதியை பெறலாம்.
 
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, தாஜ்மகாலில் இலவச வைபை வசதி தொடங்கப்பட்டது குறிப்பிடதக்கது.