செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 22 ஜனவரி 2016 (11:45 IST)

வாலிப வேகத்தில் நடந்த சம்பவம்: பாலியல் பலாத்கார குற்றம் சாற்றப்பட்ட நபர் விடுதலை

பாலியல் பலாத்கார குற்றம் சாற்றப்பட்ட நபரை விடுதலை செய்த நீதிமன்றம்

இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், இந்த உடலுறவு வாலிப வேகத்தில் நடந்தது என்று சுட்டிக்காட்டிய நீதிபதி குற்றம் சாற்றப்பட்ட நபரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார்.


 

 
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த விகுல் பக்‌ஷி என்பவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம்பெண் ஒருவர் கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கு டெல்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில், நீதிபதி வீரேந்தர் பட் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
 
அப்போது அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் முரண்பாடாக இருப்பதாக நீதிபதி கூறினார்.
 
மேலும், குற்றம் சாற்றப்பட்டவரின் குற்றத்தை நிரூபிக்க எதிர்தரப்பு போதுமான ஆதாரங்களை தாக்கல் செய்ய தவறிவிட்டது என்றும் கூறினார்.
 
மேலும், இருவரது பரஸ்பர சம்மதத்தின் பேரிலேயே இந்த உடல் சார்ந்த இணைதல் ஏற்பட்டுள்ளது என்றும், அதற்குப் பிறகே அந்த வாலிபர் திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்து இருப்பதாகக் கூறிய நீதிபதி, இருவருமே தங்கள் வாலிப பருவத்தின் தொடக்கத்தில் இருந்ததாகவும், அந்த வேகத்திலேயே இந்த தவறு நடந்துள்ளதாகவும் கூறினார். 
 
மேலும், இவர்களுக்குள் நடந்த உடலுறவு முன்னரே திட்டமிடப்பட்ட ஒன்றே தவிர தன்னிச்சையாக நிகழ்ந்தல்ல என்று கூறிய நீதிபதி, இந்த வழக்கில் குற்றம் சாற்றப்பட்டவரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.