வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 11 செப்டம்பர் 2015 (05:56 IST)

பள்ளி மாணவர்களுக்கு ராமாயணம், மகாபாரதம் பாட வகுப்புகள்: அமைச்சர் மகேஷ் சர்மா அறிவிப்பு

இந்தியாவில் பயிலும் மாணவர்களுக்கு ராமாயணம், மகாபாரதம் மற்றும் பகவத் கீதை வகுப்புகள் துவங்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, டெல்லியில், மத்திய கலாச்சார துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறியதாவது:-
 
உலகத்தில் மிகச் சிறந்த கலாசாரமாக நமது கலாசாரம் போற்றப்படடுகிறது. அதை பாதுகாக்கும் கடமையும், பொறுப்பும் நமக்கு உள்ளது.
 
எனவே, நமது கலாசாரத்தின் அடையாளத்தை மக்களுக்கும், மாணவர்கலுக்கும் உணர்த்தும் வகையில்,  மாணவர்களுக்கு மகாபாரதம், ராமாயணம் மற்றும் பகவத் கீதை கற்றுத்தரப்படும்.
 
இதனால், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை மத்திய அரசு திணிக்க விரும்புகிறது என்று எதிர்கட்சிகள் ஆதாரமற்ற புகார் தெரிவிக்கின்றனர். இதை நாங்கள் காதில் வாங்கிக் கொள்ளப்போவதில்லை. இந்த போதனைகளை மாணவர்களுக்கு கற்றுதருவதில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்றார்.
 
இந்த முயற்சியில் கலாச்சார மற்றும் மனிதவள மேம்பாடு துறை அமைச்சகங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.