வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: செவ்வாய், 19 ஜனவரி 2016 (22:44 IST)

ராமர் கோவில் விவகாரம் -லோக் ஜன் சக்தி கட்சி தொடர்பு இல்லை: ராம்விலாஸ் பஸ்வான்

பெங்களூரு - உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது குறித்து சுப்ரீம் கோர்ட் அளிக்கும் தீர்ப்பின் படி  மத்திய அரசு நடவடிக் கை எடுக்கும் என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்தார்.
 

 
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியை மேற் கொள்வோம் என்று விஷ்வ இந்த பரிஷத் அமைப்பு அறிவித்துள்ளது.
 
இந்த நிலையில், பெங்களூருவில், மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
ராமர் கோவில், பாபர் மசூதி போன்ற விவகாரங்களை மையப்படுத்தி பிரதமர் மோடி அரசியல் செய்வது இல்லை. சர்ச்சைக்குரிய விவகாரங்களில் மோடி தலையிடுவதும்  இல்லை. பிரதமர் மோடியின் அரசியல் மேடை மிகவும் நாகரீகம் கொண்டது.
 
ராமர் கோவில் விவகாரத்தில், லோக் ஜன் சக்தி கட்சிக்கு  எந்தவித தொடர்பும் இல்லை. ஆனால், ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் என்.டி ஏ. கூட்டணி அரசு சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி செயல்படும் என்றார்.