வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : புதன், 14 அக்டோபர் 2015 (09:35 IST)

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்கக்கோரிய சுப்பிரமணியன் சுவாமியின் மனு: விரைவில் விசாரிக்க முடிவு

தேசிய சின்னமாக ராமர் பாலத்தை  அறிவிக்கக்கோரி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு விரைவில் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


 

 
ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று ஒரு மனுவை சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.  
 
இந்நிலையில், நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதி அருண் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு சுப்பிரமணியன் சுவாமி ஆஜரானார்.
 
அப்போது, மத்திய அரசு முந்தைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு ராமர் பாலத்துக்கு எவ்வித சேதமும் விளைவிக்காமல் மாற்றுப்பாதையில் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த முன்வந்துள்ளதாக கூறினார்.
 
அப்போது, ராமர் பாலத்தை தொடாமல் இந்த திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற முன்வந்துள்ளது குறித்து உங்களுக்கு எப்படி தெரியும்? என்று நீதிபதிகள்  கேள்வி எழுப்பினர்.
 
அதற்கு பதிலளித்த சுப்பிரமணியன் சுவாமி, தனக்கு கிடைத்த உறுதியான தகவலின் அடிப்படையில், இதை கூறுவதாகவும், தான் கூறுவது சரியா? என்பது குறித்து நீதிமன்றம் மத்திய அரசிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்றும் கூறினார்.
 
தான் ஏற்கனவே, ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்கக்கோரி தாக்கல் செய்த மனுவின் மீது மத்திய அரசு இதுவரை பதில் ஏதும் அளிக்கவில்லை. இந்த வழக்கை விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.