அயோத்தியில் ராமர் கோவில்: கற்களைக் கொண்டுவந்து குவிக்கிறது விசுவ இந்து பரிஷத்


Suresh| Last Modified திங்கள், 21 டிசம்பர் 2015 (11:42 IST)
அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டுவதற்காக 2 லாரிகளில் விசுவ இந்து பரிஷத் கற்கள் கொண்டுவந்து குவித்துள்ளது.

 

 
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக 2 லாரிகளில் அயோத்தி நகருக்கு கற்கள் கொண்டுவரப்பட்டன.
 
அந்த கற்கள் அங்குள்ள விசுவ இந்து பரிஷத் தலைமையகத்தில் கொட்டப்பட்டன. அந்த கற்களுக்கு "ராமஜென்ம பூமி நியாஸ்" அமைப்பின் தலைவர் மகந்த் நிருத்ய கோபால் தாஸ் பூஜை செய்தார். 
 
அயோத்தியில், ராமர் கோவிலைக் கட்டுவதற்குத் தேவையான கற்களை நாடு முழுவதுதிலும் இருந்து சேகரிக்கப் போவதாக கடந்த ஜூன் மாதம் அந்த அமைப்பு அறிவித்தது.
 
இது குறித்து சமீபத்தில் மறைந்த அசோக் சிங்கால், "ராமர் கோவில் கட்ட 2 லட்சத்து 25 ஆயிரம் கன அடி கற்கள் தேவைப்படும்.

அவற்றில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடி கற்கள், அயோத்தியில் உள்ள விசுவ இந்து பரிஷத் தலைமையகத்தில் தயாராக உள்ளன. மீதமுள்ள 1 லட்சம் கன அடி கற்கள் நாடு முழுவதும் உள்ள இந்து பக்தர்களிடம் சேகரிக்கப்படும்" என்று கூறியிருந்தார்.
 
இது குறித்து பைசாபாத் மாவட்ட காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், நிலைமையை அவர்கள் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், கொண்டுவரப்பட்டுள்ள கற்கள் தனியார் நிலத்தில் குவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
 
மேலும், அப்பகுதியில், அமைதிக்கோ, மத நல்லிணக்கத்திற்கோ அச்சுறுத்தல் ஏற்பட்டால், நாங்கள் உரிய நடவடிக்கை எடுப்போம் என்றும் கூறியுள்ளார்.
 
இந்நிலையில், கற்களின் கொண்டுவரப்படுவது தொடரும் என்று மகந்த் நிருத்ய கோபால் தாஸ் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :