வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 11 மார்ச் 2015 (17:30 IST)

’காந்தியை பிரிட்டிஷ் ஏஜெண்ட்’ என குறிப்பிட்ட கட்ஜுக்கு எதிராக மாநிலங்களவை தீர்மானம்

காந்தி குறித்து இந்திய பிரஸ் கவுன்சிலின் தலைவர் மார்கண்டேய கட்ஜூ தெரிவித்த கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்து மாநிலங்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியும், இந்திய பிரஸ் கவுன்சிலின் தலைவருமான மார்கண்டேய கட்ஜூ தனது வலைப்பக்கத்தில் [Blogspot] காந்தி குறித்து கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.
 

 
அதில், காந்தி பிரித்தாளும் சூழ்ச்சியையை பயண்படுத்திய பிரிட்டானிய அரசின் கொள்கையை அதிகப்படுத்தினார் என்றும் பகத்சிங், ராஜகுரு போன்ற புரட்சிவாதிகளின் நடவடிக்கையை மாற்றுவதற்காக ‘சத்தியாகிரகத்தை கொண்டு வந்தார் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
 
மேலும், காந்தி தொழில் மயமாக்கலுக்கு எதிராக செயல்பட்டார் என்றும் அவர் உபதேசித்த கோட்பாடுகள் அனைத்தும் முட்டாள் தனமானது. இது மக்களை ஏமாற்றும் செயல் என்றும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார். இதனால் காந்தியை பிரிட்டனின் ஏஜெண்டாக செயல்பட்டார் என்று குறிப்பிட்டிருந்தார்.
 
மாநிலங்களவையில் இது தொடர்பாக பிரச்னை கிளப்பிய எதிர்க்கட்சிகள், கட்ஜூவின் கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தின. பின்னர் அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தனர்.
 
இந்த தீர்மானத்தை அவைத் தலைவர் ஹமீது அன்சாரி வாசித்தார். அதில், மகாத்மா காந்தி மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்து மார்க்கண்டேய கட்ஜூ தெரிவித்த கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.