வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bharathi
Last Modified: ஞாயிறு, 27 செப்டம்பர் 2015 (07:36 IST)

குற்றவாளிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு தேர்தலில் போட்டியிட வாயப்பு: பா.ஜ.க. எம்.பி.யின் பேச்சால் சர்ச்சை

குற்றவாளிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு பீகார் தேர்தலில் போட்டியிட வாயப்பு வழங்கப்படுவதாக பா.ஜ.க. தலைமை மீது அக்கட்சி எம்.பி.குற்றஞ்சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 
 
பா.ஜ.க. எம்.பி., ஆர்.கே. சிங் என்பவர் தான் இந்த சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறியவர்.  இது குறித்து அவர் கூறுகையில், "தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்கள் பலரும் கட்சியால் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை பாஜக அவசர அவசரமாக  சேர்த்து தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குகிறது".
 
"பணம் பெற்றுக்கொண்டு இவ்வாறு வேட்பாளர்கள் தீர்மானிக்கப்படுகின்றனர். " என்று கூறினார். பீகாரில் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், அக்கட்சி எம்.பி. ஆர்.கே.சிங்கின் இத்தகைய பேச்சு பா.ஜ.க.வுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
 
ஆர்.கே. சிங்கின் இத்தகைய குற்றச்சாட்டை பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் முற்றிலுமாக மறுத்துள்ளனர்.