வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 11 செப்டம்பர் 2019 (11:54 IST)

ரூ.1,41,000: லாரி டிரைவரிடம் ஃபைனை தீட்டிய டிராஃபிக் போலீஸ்!

ராஜஸ்தானில் லாரி ஓட்டுனர் ஒருவரிடம் சாலை விதிகளை மீறியதற்கு போலீஸார் ரூ.1,41,000 அபராதம் விதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் ஏற்கனவே நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சட்டத்தின் கீழ் சாலை விதிமுறைகளை மீறும் போது விதிக்கப்படும் அபராதம் தலைசுற்ற வைக்கிறது. 
 
ஆம், அபராத கட்டணத்தை 10 மடங்கு உயர்த்தியுள்ளனர். இந்த புதிய விதிகளின் படியே போலீஸார் அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில், ராஜஸ்தானில் லாரி ஓட்டுனர் ஒருவரிடம் சாலை விதிகளை மீறியதற்கு ரூ.1,41,000 அபராதம் விதித்துள்ளனர். 
லாரியில் அதிக எடையை ஏற்றி என்றதற்கு ரூ.1 லட்சமும், விதி மீறலுக்காக ரூ.41,000 அபராதம் விதிக்கப்படுள்ளது. அந்த அபராத தொகையை லாரி ஓட்டுனர் செலுத்தி உள்ளார். இருப்பினும், அந்த ரசீது சமூக வலைத்தளங்களில் வைரலாகி விவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது.