1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Rajasthan Government School Principal Suspended After Video of Him Bathing With Girl Students Goes Viral

மாணவிகளுடன் குளித்த பள்ளி முதல்வர்.. வீடியோ வெளியான உடன் சஸ்பெண்ட்...

ராஜஸ்தான்
ராஜஸ்தானில் மாணவிகளுடன் அணையில் குளித்த அரசு பள்ளி முதல்வரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அல்வார் மாவட்டம் தனகாசி பகுதியில் உள்ள ரௌபாவி படக் சாப்லி அரசு மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் லால் சந்த் மீனா, ஆகஸ்ட் 15-ம் தேதி 200-க்கும் மேற்பட்ட மாணவர்களை பள்ளியில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அணைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
 
அந்த அணையில் சுமார் 11 அடி ஆழத்துக்கு தண்ணீர் இருந்ததாகவும், நீரில் மூழ்கும் அபாயம் காரணமாக பொதுமக்கள் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகளுடன் பள்ளி முதல்வர் அணையில் குளித்ததாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
 
வீடியோ வெளியானதை தொடர்ந்து, பள்ளி முதல்வரின் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பில் இருக்கும் பள்ளி முதல்வர், தடை செய்யப்பட்ட ஆபத்தான பகுதியில் மாணவர்களை அழைத்து சென்றதுடன், அவர்களுடன் குளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
 
இதையடுத்து, இடைநிலைக் கல்வி இயக்குநரகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து லால் சந்த் மீனாவை பணியிடை நீக்கம் செய்துள்ளது. மாணவர்களிடம் அவர் நடந்துகொண்ட விதம் அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகளுக்கு எதிரானதாக இருப்பதாக கல்வித் துறை குற்றம் சாட்டியுள்ளது.
 
Edited by Siva
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து!.. முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு...