வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Geetha priya
Last Updated : செவ்வாய், 8 ஜூலை 2014 (13:45 IST)

ரயில்வே பட்ஜெட் 2014 - 'நிலுவையில் இருக்கும் திட்டங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ. 5 லட்சம் கோடி தேவை'

2014-15 ஆம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்து வரும் மத்திய அமைச்சர் சதானந்த கௌடா, தற்போது செயல்படுத்தப்படும் ரயில் திட்டங்களுக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ. 5,00,000 கோடி தேவை எனத் தெரிவித்துள்ளார் 
 
2014-15 ஆம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னர் மத்திய அமைச்சர் சதானந்த கௌடா, இந்த பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் என நம்புகிறேன் எனத் தெரிவித்திருந்தார். 
 
தற்போது ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்து வரும் அவர், தற்போது செயல்படுத்தப்படும் ரயில் திட்டங்களுக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ. 5,00,000 கோடி தேவை எனவும், ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டது கடினமாக இருந்தாலும், அதனால் ரயில்வே துறைக்கு ரூ. 8000 கோடி வருவாய் கிடைக்கும் எனவும், கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய ரயில்வே 3,700 கி.மீ தண்டவாளங்கள் அமைக்க ரூ.41,000 கோடி செலவு செய்துள்ளது என்றும் குறிப்பிட்டார். 
 
மேலும், ரயில்வே பட்ஜெட்டின் பெரும்பாலான செலவீடு பாதுகாப்பு சார்ந்த திட்டங்களுக்கு செலவிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.