வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By ashok
Last Updated : வியாழன், 17 செப்டம்பர் 2015 (18:51 IST)

பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய ராகுல் காந்தி

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 65வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ராகுல் இன்று தனது டுவிட்டர் வலைதளத்தில், பிரதமர் நரேந்திர மோடிக்கு  எனது பிறந்த நாள் வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
 
மேலும் கடந்த ஜூன் 19ஆம் தேதி அன்று, மோடி, தனது டுவிட்டர் வலைதளத்தில் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து செய்தியினை தெரிவித்து கொண்டார். அதில், தங்களது உடல் நலம், நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டி கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இதற்கு உடனடியாக ராகுல்,மோடிக்கு நன்றி தெரிவித்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.