வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bharathi
Last Updated : சனி, 19 செப்டம்பர் 2015 (10:16 IST)

பீகாரில் ராகுல் காந்தி இன்று பிரச்சாரம்

பீகாரில் காங்கிரஸ் சார்பில் இன்று நடைபெறும் தேர்தல் பரப்புரையில் அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொள்ள உள்ளார்.


 
 
243 தொகுதிகளை உள்ளடக்கிய பீகார் சட்டசபையின் பதவிக்காலம் வருகிற நவம்பர் மாதம் 29 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனயடுத்து புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அக்டோபர் 12 முதல் நவம்பர் 5 ஆம் தேதி வரை 5 கட்டங்களாக நடைபெற உள்ளன.
 
ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் கூட்டணி சேர்ந்து இந்த தேர்தலை எதிர்கொள்ள உள்ளன.
 
243 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் தலா 100 இடங்களிலும், காங்கிரஸ் 40 இடங்களிலும் போட்டியிடுகின்றன. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அங்குள்ள மேற்கு சம்பரான் மாவட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி இன்று தேர்தல் பரபரப்புரையில் ஈடுபட உள்ளார்.
 
இந்த பிரச்சாரக் கூட்டத்தில்  கூட்டணி கட்சித் தலைவர்களான நித்தீஷ்குமார், லல்லு பிரசாத் யாதவ் ஆகியோர் ராகுலின் இப்பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்ளமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.