டெல்லி நேபாள தூதரகத்தில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்காக ராகுல் காந்தி இரங்கல்

Ilavarasan| Last Updated: சனி, 2 மே 2015 (11:07 IST)
டெல்லியில் நேபாள தூதரகத்துக்கு சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்காக இரங்கல் தெரிவித்தார்.
தூதரகத்தில் இந்தியாவுக்கான நேபாள நாட்டின் தூதர் தீபக்குமார் உபாத்தியாவை சந்தித்த ராகுல், நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்காக தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தார்.

இந்த துயரத்தில் காங்கிரஸ் கட்சியும் பங்கேற்பதாக அவர் குறிப்பிட்டார். பின்னர் அங்கிருந்த இரங்கல் பதிவேட்டில் ராகுல் காந்தி தனது துயரத்தை பதிவு செய்தார். நேபாள மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் காங்கிரஸ் கட்சி செய்ய தயாராக உள்ளதாக செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :