செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: வெள்ளி, 29 மே 2015 (23:03 IST)

ஒழுக்கம் என்ற பெயரில் தனித்தன்மைகளை ஆர்.எஸ்.எஸ். இயக்கம் கொலை செய்கிறது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ஒழுக்கம் என்ற பெயரில் தனித்தன்மைகளை ஆர்.எஸ்.எஸ். இயக்கம் கொலை செய்கிறது என அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்
 
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட  அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:-
 
பாஜக, அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-ன் பயிற்சி முகாம்கள் போல, இந்தியா மீது ஆளுமை செலுத்த வேண்டும் என நினைக்கிறது. ஆனால் அது ஒரு போதும்  நடக்காது. காரணம், இந்தியா ஒரு ஜனநாயக நாடு.
 
ஆர்.எஸ்.எஸ். இயக்கம் எந்த விவாதத்தையும் ஆலோசனைகளையும் அனுமதிப்பதில்லை. ஒழுக்கம் என்ற பெயரில் தனித்தன்மைகளை ஆர்.எஸ்.எஸ். இயக்கம் கொலை செய்கிறது.
 
ஆர்.எஸ்.எஸ்.-ன் இத்தகைய கொள்கைகள் இந்தியாவை நாசம் செய்கிறது. ஒருவர் பேச மற்ற அனைவரும் கேட்க வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ்.- கோட்பாடு. எழுதப்படாதவிதி. 
 
ஆனால், நீங்கள் அனைவரும் வாருங்கள் நாம் ஒன்றாக அமர்ந்து பேசுவோம், இதில் இருந்து எல்லா பிரச்சனைக்கும் சிறந்த தீர்வை எட்ட முடியும். காங்கிரஸ் கட்சியில் தான் விவாதத்திற்கும், உரையாடலுக்கும் இடம் உள்ளது. ஆனால் பாஜகவில் அது இல்லை.
 
நமது நாட்டின் பிரதமர் மங்கோலியாவுக்குக் கூட போய்வந்துவிட்டார். ஆனால், இந்தியாவில் உள்ள ஏழை விவசாயி வீட்டுக்கு அவரால் செல்ல முடியவில்லை என்று குற்றம் சாட்டினார்.
 
ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சி, ஆர்.எஸ்.எஸ், நரே்திர மோடி, பாஜக, டெல்லி 
 
Rahul Gandhi, Congress, BJP, RSS, naretira Modi, Delhi
 
ஒழுக்கம் என்ற பெயரில் தனித்தன்மைகளை ஆர்.எஸ்.எஸ். இயக்கம் கொலை செய்கிறது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
 
ஒழுக்கம் என்ற பெயரில் தனித்தன்மைகளை ஆர்.எஸ்.எஸ். இயக்கம் கொலை செய்கிறது என அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 