தாஜ் மகாலுக்கு டூர் செல்வதுபோல ராகுல் காந்தி ஏழைகள் வீட்டிற்கு செல்கிறார் என நரேந்திர மோடி பேச்சு

Geetha Priya| Last Modified திங்கள், 21 ஏப்ரல் 2014 (16:41 IST)
தாஜ் மகாலை பார்க்காதவர்கள் அங்கு சுற்றுலாவிற்கு செல்வது போல
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி வறுமையில் வாழும் ஏழை மக்களின் வீடுகளுக்கு செல்வதாக உத்தர பிரதேசத்தில் தேர்தல்
பிரச்சாரம் மேற்கொண்ட மோடி கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடெங்கும் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில், உத்தர பிரதேசத்தில் தேர்தல்
பிரச்சாரம் மேற்கொண்ட மோடி, தாஜ் மகாலை பார்க்காதவர்கள் அங்கு சுற்றுலா சென்று புகைப்படம் எடுத்துக்கொள்வது போல, வறுமையை அனுபவிக்காத
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி வறுமையில் வாழும் ஏழை மக்களின் வீட்டிற்கு சென்று புகைப்படம் எடுத்துக்கொள்கிறார் எனக் கூறினார்.

பிறக்கும் போதே அனைத்து செல்வங்களுடன் இருந்தவர்களுக்கு வறுமை எப்படிபட்டது எனத் தெரியாது. நான் வறுமையை
உணரமுடியும், ஏனென்றால் நான் வறுமையில் தான் பிறந்தேன் எனவும் அவர் பேசியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :