மோடியின் இடுப்பை சுற்றி கயிற்றை கட்டி சிறையில் தள்ளுங்கள் - மம்தா ஆவேசம்

'Put Modi in Jail With Rope Around Waist'
Geetha Priya| Last Modified செவ்வாய், 6 மே 2014 (12:42 IST)
மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அம்மாநில முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி, மோடியின் இடுப்பில் கையிற்றை கட்டி அவரை சிறையில் அடைக்கவேண்டுமென ஆவேசமாக பேசியுள்ளார். 
இந்திய-வங்கதேச எல்லையில் இருந்து சில கி.மீ தூரம் உள்ள போங்கோவன் என்னும் இடத்தில் பேசிய அவர், மேற்கு வங்கத்தில் வாழும் மக்கள் மத்தியில் பெங்காலி பேசுபவர்களுக்கும் பெங்காலி மொழி பேசாதவர்களுக்கும் இடையே பிளவு உண்டாக்க நினைப்பவர்களின் எண்ணம் நிறைவேறாது. 
 
மக்கள் மத்தியில் வேறுபாடுகளை சுட்டிக்காட்டி கலவரம் உண்டாக்க திட்டமிடும் இவருக்கு பிரதமர் ஆக எந்த உரிமையும் இல்லை. தொடர்ந்து தேர்தல் விதிமுறைகளை மீறும் இவரின் இடுப்பை சுற்றி கையிற்றை கட்டி சிறையில் அடைக்கவேண்டும். 
 
நான் அவர் இங்கு பொதுக்கூட்டங்களில் பேச அனுமதித்துள்ளேன். இதே நான் இவ்வாறு குஜராத்தில் பேசமுடியுமா?  இவர் அரசியலில் ஈடுபடவே தகுதி அற்றவர் என மம்தா பேசியுள்ளார். 
 


இதில் மேலும் படிக்கவும் :