வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bharathi
Last Modified: புதன், 7 அக்டோபர் 2015 (10:37 IST)

பஞ்சாப்பில் விவசாயிகள் ரயில் மறியல்

பஞ்சாப்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் நடத்தி வரும் ரயில் மறியல் போராட்டத்தால் அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ரயில்சேவை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.


 
 
வெள்ளைப் பூச்சி தொல்லையால் மகசூலை இழந்த விவசாயிகளுக்கு 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றும் நாளையும் ரயில்மறியல் போராட்டம் நடைபெறும் என்று பஞ்சாப்பைச் சேர்ந்த 8 விவசாய சங்கங்கள் முன்னதாக அறிவித்திருந்தன.
 
இதனிடையே திட்டமிட்டப்படி தங்களின் ரயில் மறியல் போராட்டத்தை விவசாயிகள் இன்று காலை தொடங்கினர்.இதனால்  அமிர்தசரஸ் -  இந்தூர், பெரோஸ்பூர் - மும்பை, இந்தூர் - சத்திஷ்கர் இடையே இயக்கப்பட இருந்த ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாத ரயில்வே அறிவித்துள்ளது.
 
ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி ஒருவர் கூறுகையில்,"  திட்டமிட்டப்படி இன்றும் நாளையும் நாங்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போகிறோம். எங்களின் கோரிக்கையை மாநில அரசு ஏற்கவேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.
 
12 ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் ரயில்வே நிர்வாகத்துக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ரயில்களை இயக்கவிடமால் மறியல் செய்யும் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த உதவுமாறு ரயில்வே துறை மாநில அரசிடம் உதவி கோரியுள்ளது.