வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: புதன், 14 அக்டோபர் 2015 (23:51 IST)

இந்தியத் திரைப்பட விழாவில் குற்றம் கடிதல் படத்திற்கு விருது

புதுச்சேரியில் இந்தியத் திரைப்பட விழாவில் குற்றம் கடிதல் படம் விருதுபெற தேர்வாகியுள்ளது.
 

 
புதுச்சேரியில் இந்தியத் திரைப்பட விழா, புதுச்சேரி அரசு செய்தி, விளம்பரத் துறை, நவதர்சன் பிலிம் சொசைட்டி, அலையன்ஸ் பிரான்சிஸ் சார்பில் அக்டோபர் 16ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை புதுவை ருக்மணி திரையரங்கில் நடைபெறுகிறது.
 
இதில், 2015 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படமாக குற்றம் கடிதல் படத்தை புதுச்சேரி அரசு தேர்வு செய்துள்ளது. திரைப்பட விழாவின் போது, முதல்வர் ரங்கசாமி விருது வழங்க உள்ளார்.
 
மேலும், இந்த திரைப்பட விழாவில், அக்டோபர் 16ஆம் தேதி குற்றம் கடிதல் (தமிழ்) படமும், 17ஆம் தேதி போதான் (பெங்காலி) படமும், 18 ஆம் தேதி முன்னறிவிப்பு (மலையாளம்) படமும், 19 ஆம் தேதி 1 டிசம்பர் (கன்னடம்) படமும், 20 ஆம் தேதி அங்கோன் தேகி (இந்தி) உள்ளிட்ட படங்கள் திரையிட உள்ளன.