வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : செவ்வாய், 29 ஜூலை 2014 (13:05 IST)

காசா மீதான தாக்குதலை கண்டித்து காஷ்மீரில் நடைபெற்ற போராட்டத்தில் கலவரம்

காசாவில் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் இராணுவத்தினரால் கொல்லப்படுவதைக் கண்டித்து காஷ்மீரில் நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. வன்முறையில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
காசா மீதான இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலை கண்டித்து இன்று காஷ்மீர் மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. ரம்ஜான் பண்டிகைக்கான தொழுகை முடிந்ததும் மாநிலம் முழுவதும் நடைபெற்ற இந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் பலர் அங்குள்ள ஹைதர்போரா மற்றும் மவுலானா ஆசாத் சாலைக்கும் இடையே கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு நிலைமை மிகவும் மோசமடைந்தது. 
 
பாராமுல்லாவில் உள்ள சோபாரிலும், அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள சோபியானிலும் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டு வீச்சையும், தடியடியும் நடத்திவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.