மாநிலங்களவை 8 எம்.பி.க்கள் நடத்தி வந்த தர்ணா போராட்டம் வாபஸ்!!

Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (11:35 IST)
மாநிலங்களவை 8 எம்.பி.க்கள் நடத்தி வந்த தர்ணா போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. 
 
மாநிலங்களவையில் நேற்றுமுந்தைய நாள் ஒப்புதலுக்கு கொண்டு வரப்பட்ட விவசாய மசோதாவை எதிர்த்து எதிர்க்கட்சி எம்பிகள் பேசி வந்தனர். இந்நிலையில் தங்கள் கருத்துகளை ஏற்று மசோதாவில் மாற்றங்கள் செய்யவில்லையென எம்.பிக்கள் புகார் தெரிவித்து பாராளுமன்ற விதிகள் புத்தகத்தை கிழித்து அமளியில் ஈடுபட்டனர்.
 
அதை தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட 8 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தாங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த எம்பிக்கள் பாராளுமன்ற வளாகத்திலேயே தர்ணாவில் ஈடுபட்டனர். விடிய விடிய பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்திய அவர்கள் சஸ்பெண்டை ரத்து செய்யும் வரை போராடுவோம் என தெரிவித்துள்ளனர். 
 
இந்நிலையில் 2 வது நாளாக தர்ணா செய்து வந்தன 8 எம்.பிக்கள்.  இதனைத்தொடர்ந்து மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார். பின்னர், மாநிலங்களவை தொடரை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கும் என காங்கிரஸ் எம்.பி. குலாம்நபி ஆசாத் அறிவித்தார். இந்த அறிவிப்பால மாநிலங்களவை 8 எம்.பி.க்கள் நடத்தி வந்த தர்ணா போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :