பேராசிரியர் கிலானிக்கு 14 நாள் காவல்

பேராசிரியர் கிலானிக்கு 14 நாள் காவல்


K.N.Vadivel| Last Modified வியாழன், 18 பிப்ரவரி 2016 (22:56 IST)
தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள,  டெல்லி பல்கலைக் கழக முன்னாள் பேராசிரியர் கிலானியை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
 
 
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில், கடந்த 9 ஆம் தேதி அன்று அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட நாளை வீரவணக்க நாளாக மாணவர்கள் அனுசரித்தனர்.
 
இந்த நிகழ்ச்சியில், இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் கோஷம் எழுப்பப்பட்டதாக இந்துத்துவா அமைப்புகள் குற்றம் சாட்டியது. இதனால், டெல்லி ஜே.என்.யூ. மாணவர் சங்கத் தலைவர் கல்யான்குமார் தேசத் துரோக வழக்கில் கீழ் கைது செய்யப்பட்டார்.
 
இந்த நிலையில், டெல்லியில் கடந்த 10 ஆம் தேதி செய்தியாளர் சந்திப்பில், இந்தியாவுக்கு எதிரான கருத்துகள் முன்வைக்கப்பட்டதால், பேராசிரியர் கிலானி கைது செய்யப்பட்டார்.  இதையடுத்து கிலானியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திகார் சிறையில் 14 காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். 


இதில் மேலும் படிக்கவும் :